No results found

    இரு அணிகள்...


    ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை இரண்டு அணிகள் உண்டு! குரு பகவான் தலைமையில் உள்ளவர்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், கேது. சுக்கிரன் தலைமையில் இருப்பவர்கள் சனி, புதன், ராகு. குரு பகவான் அருளணியை சேர்ந்தவர்! சுக்கிரன் பொருளணியை சேர்ந்தவர்! குரு, ஞானம், வாக்கு, ஆசிரியர், ஆன்மிகம் போன்ற விசயங்களுக்கு அதிபதி! சுக்கிரன் அதற்கு நேர் எதிர் அதாவது சுகபோகம், காமம், காதல், உல்லாசம், ஆடம்பரம், கலை, நாட்டியம், நடனம் இவற்றிற்கு அதிபதி. இவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொள்ளாது! சுக்கிரன் குரு வீட்டில் இருந்தால் குரு ரொம்ப இடைஞ்சல் செய்வார். ஆனால் மீனத்தில் விதிவிலக்கு உண்டு அது சுக்கிரனின் உச்ச வீடு! ஆனால் குரு சுக்கிர வீடுகளில் இருந்தால் சுக்கிரன் இடைஞ்சல் செய்ய மாட்டார். ஏனென்றால் குரு எதிரியாக இருந்தாலும் குருபகவான் மேல் சுக்கிரனுக்கு ஒரு மரியாதை இருக்கும். குரு, சுக்கிரனும் ஒரே வீட்டில் இருந்தால் அந்த ஜாதகர் இளமையில் காதல் வயப்படுவார். ஆனால் மீனத்தில் மட்டும் குரு, சுக்கிரனும் ஒன்றாக இருந்தால் பிரச்சனை இல்லை. அது குருவுக்கும் ஆட்சி வீடு!

    Previous Next

    نموذج الاتصال