No results found

    திருமணத்திற்கு ரஜ்ஜு பொருத்தம் முக்கியமா?


    நட்சத்திரப் பொருத்தங்களிலேயே மிக முக்கியமான பொருத்தம் ரஜ்ஜுப் பொருத்தமாகும். திருமணமான தம்பதிகள் பல்லாண்டுகள் வாழ மாங்கல்யப் பொருத்தம் எனும் திருமண கயிறுப் பொருத்தம் மிக அவசியம். இது ஆயுளைப்பற்றிக் கூறும் பொருத்தமாகும். தசவிதப் பொருத்தங்களில் அனைத்துப் பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜு பொருத்தம் இல்லையெனில் திருமணம் செய்யக் கூடாது என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மிக முக்கியமாகப் பார்க்கப்படுகின்ற இந்தப் பொருத்தம் இல்லாத பலரது வாழ்க்கை சிறப்பாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ரஜ்ஜுப் பொருத்தம் இல்லாதவர்களும் 8-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசாபுத்தி காலங்களில் மட்டுமே அசுப பலன்களை சந்திக்கிறார்கள். மற்ற காலங்களில் சிறு சிறு மனஸ்தாபத்தை மட்டுமே தருகிறது.

    Previous Next

    نموذج الاتصال