ஒருவரின் சுய ஜாதக ரீதியாக 5-ம் இடத்துடன் சம்பந்தம் பெற்ற கிரக காரக உறவே ஒருவரை கடனில் இருந்து மீட்கும் வலிமை படைத்தவர்.
சூரியன் 5-ம் இடத்துடன் சூரியன் சம்பந்தம் பெற்றவர்களுக்கு தந்தை, மாமனார், அரசியல்வாதிகள் அல்லது சூரியனின் ஆதிக்கம் நிறைந்த பெயர் கொண்டவர்கள், சிவனின் பெயர் கொண்டவர்கள் மூலம் கடனை தீர்க்க உதவி கிடைக்கும். சந்திரன் 5-ம் இடத்திற்கு சந்திரன் சம்பந்தம் பெற்றவர்களுக்கு தாயார், மாமியார் அல்லது வயதான உறவுப் பெண்கள், சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த பெயர்கள் கொண்டவர்கள், அம்மன் பெயர் கொண்டவர்கள் கடன் தீர்க்க உதவுவார்கள்.
செவ்வாய் 5-ம் இடத்திற்கு செவ்வாய் சம்பந்தம் இருந்தால் உடன் பிறந்த சகோதர, சகோதரிகள், மைத்துனர்கள், முருகனின் பெயர் கொண்டவர்கள் உதவி செய்வார்கள். சிலருக்கு வீடு, நிலம் போன்ற சொத்துகளை விற்பதன் மூலம் கடன் அடையும்.
புதன் 5-ம் இடத்திற்கு புதன் சம்பந்தம் பெற்றால் தாய் மாமன், நண்பர்கள், காதலன், காதலி, மகா விஷ்ணுவின் பெயரில் உள்ளவர்கள், வங்கி கடன், நிலம் விற்பனை மூலம் கடன் தீரும்.
குரு 5-ம் இடத்திற்கு குரு சம்பந்தம் பெற்றால் பிள்ளைகள், பாட்டனார் சித்தர்களின் பெயரை கொண்டவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.
சுக்ரன் 5-ம் இடத்திற்கு சுக்ரன் சம்பந்தம் இருந்தால் அத்தை, பெரியம்மா, மனைவி, மகாலட்சுமியின் பெயர் உள்ளவர்கள் மூலம் கடன் தீரும்.
சனி 5-ம் இடத்திற்கு சனி சம்பந்தம் பெற்றால் ரத்த பந்த உறவுகளான சித்தப்பா, பங்காளிகள், சின்ன மாமனார், வேலையாட்கள் , நம்பிக்கையான விசுவாசிகள், காவல் தெய்வத்தின் பெயரைக் கொண்டவர்கள் மூலம் உதவி கிடைக்கும். பலர் சுயமாக உழைத்து கடன் தீர்க்கிறார்கள்
ராகு/கேது 5-ம் இடத்துடன் ராகு/கேது சம்பந்தம் பெறுபவர்கள் குல தெய்வ வழிபாட்டால் கடனில் இருந்து விடுபட முடியும். மேலே குறிப்பிட்டது போல் 6-ம் பாவக அதிபதியோடு தொடர்பு பெறும் கிரகம் கடனையும், 5-ம் பாவகத்தோடு தொடர்பு பெறும் கிரகம் கடனிலிருந்து விடுபடும் காலத்தையும் உணர்த்தும். கடன் வாங்கும் முன்பே சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் , ருண ஸ்தானம் , பாக்கிய ஸ்தானம், அஷ்டம ஸ்தானங்களையும் தசா, புத்திகளை ஆய்வு செய்து கடன் வாங்குவதை முடிவு செய்தல் சிறப்பு. எவர் ருணம், ரோக சத்ரு ஸ்தானத்தை பரிபூரணமாக அனுபவித்து அவதியுறுகிறார்களோ அவர்களுக்கு தான் ஞானம் பிறக்கும். ஞானம் பிறந்தவன் தான் முக்திக்கு வழி தேடுகிறான். சென்ற பிறவியில் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.